அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில், ஞாயிறு

  • மூலவர்: புஷ்பரதேஸ்வரர்
  • அம்மன்: சொர்ணாம்பிகை
  • ஊர்: ஞாயிறு
  • மாவட்டம்: திருவள்ளூர்
  • தீர்த்தம்: சூரிய தீர்த்தம்
  • விருட்சம்: செந்தாமரை
  • அவதாரம்: சங்கிலி நாச்சியார்
  • முக்தி: கன்வ மகரிஷி
Gnaayiru

கோயிலுக்கு செல்லும் வழி

பஸ் ரூட்: இத்திருத்தலம் செங்குன்றத்திலிருந்து 10 கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது. பாரீஸ் கார்னரிலிருந்து மாதவரம்-செங்குன்றம் வழியாக் பேருந்து இயக்கப்படுகிறது. பேருந்து எண்: T57, 58A & 58G

ஆலய நேரம்: காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை.

தல வரலாறு:

காஷிப மகரிஷியின் புதல்வரான சூரிய பகவான் எமதர்மனின் மகளான சமுக்னாதேவியை மணந்து கொண்டார். நாளுக்கு நாள் சூரியனின் வெப்பத்தன்மை அதிகமாகவே சமுக்ஞா, தன் நிழலை உருவமாக்கி (சாயா தேவி) கணவனிடம் விட்டுச் சென்றுவிட்டாள். சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த புதல்வர் தான் சனி பகவான். எமன் மூலமாக சமுக்ஞா தேவி பிரிந்து சென்றதை அறிந்த சூரிய பகவான், மனைவியை அழைத்து வரக் கிளம்பினார். அப்போது அவர் திருவண்ணாமலை சென்று கிரிவலம் செய்து வரும் வேளையில், வானத்தில் ஒரு ஜோதி தோன்றியது. அதை பின் தொடர்ந்து சென்ற சூரியர், அது இங்குள்ள தடாகத்தில் பூத்திருந்த தாமரை மலருக்குள் ஐக்கியமானதை கண்டார். ஜோதியின் நடுவில் தோன்றிய சிவன், அவரது உக்கிரத்தை குறைத்து, மனைவியுடன் சேர்ந்து வாழ அருளினார். சூரிய பகவான் விரும்பியவாறு இங்கேயே புஷ்பரதேஸ்வரர் என்ற திருப்பெயரில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். பல்லவர், சோழர், பாண்டிய, விஜயநகர மன்னர்கள் வழிபட்ட தலமாகும்.

சூரிய வழிபாடு

சித்திரை மாதம் முதல் வாரம் (1-7ம் தேதி), காலை 6:10 மணிக்கு சிவன் மற்றும் அம்பிகை மீது சூரிய ஒளி விழுகிறது. இத்திருத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய ஓரை சமயத்தில் (காலை 6-7, மதியம் 1-2, மாலை 6-7) வழிபாடு செய்வோர்க்கு ஜென்ம பாவம் நீங்கி மோட்சம் கிட்டும். Suriyar

பரிகார பூஜைகள்:

சூரியன், கண் தொடர்பான நோய்களை நிர்ணயிக்கும் கிரகமாக இருப்பதால், பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் இங்கு சிவன், சூரியனுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட கண் நோய் நீங்க பெறுகிறார்கள்.

விவாகத் தடை: 11 வாரங்கள் இத்திருத்தலத்தில் பூஜித்து, சர்க்கரை பொங்கல் அபிஷேகம் செய்து வர விவாகத் தடை நீங்கி திருமணம் நடைபெறும்.

தொழில் சம்பந்தமான பிரச்சனை/சொத்துப் பிரச்சனை: 11 வாரங்கள் இத்திருத்தலத்தில் பூஜித்து, தயிர் சாத அபிஷேகம் செய்து வர தொழில் பிரச்சனை/சொத்துப் பிரச்சனை நீங்கப் பெறும்.

குழந்தைகளின் கல்வி மேம்பட: 11 வாரங்கள் இத்திருத்தலத்தில் பூஜித்து, கோதுமை கேசரி அபிஷேகம் செய்து வர குழந்தைகளின் கல்வி மேம்படும்.

பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்க: பிரகாரத்தில் கிரீடம் அணியாத பல்லவ விநாயகர் இருக்கிறார். தந்தைக்கு மரியாதை செயும் விதமாக, இவர் இவ்வாறு இருப்பதாக ஐதீகம். சிவனை வழிபட்ட கண்வ மகரிஷி கோயில் முன் மண்டபத்தில் இருக்கிறார். பல் நோயுள்ளவர்கள் இவருக்கு 6 வாரங்கள் 9 நெய் தீபம் ஏற்றி வழிபட பல் நோய் நீங்க பெறுவர்.

மாதத்தில் ஒரு ஞாயிறு 9 முறை ஆதித்ய ஹிருதய பாரயாணம் செய்து இத்திருத்தலத்தில் சூரிய வழிபாடு செய்ய எதிரிகளால் ஏற்படும் துன்பம் நீங்க பெறும்.

சிறப்புகள்:

  1. கன்வ மகரிஷி முக்தி அடைந்த திருத்தலம்.
  2. சுந்தரர் மனைவி சங்கிலி நாச்சியார், இவ்வூரில் பிறந்தவர். புஷ்பரதேஸ்வரரை வழிபட்ட அவர், இங்கிருந்து திருவொற்றியூர் சென்று சிவசேவையில் ஈடுபட்டு, பின்பு சுந்தரரை மணந்து கொண்டார். இவருக்கும் இங்கு சன்னதி இருக்கிறது. அமாவாசை, மாசி மகத்தன்று சங்கிலியாருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது.
Kanvar  Vallaba Ganapathy



சீனிவாசன் ஜானகிராமன்
HTML Comment Box is loading comments...


முதல் பக்கம்

© www.adiyaar.com