அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி

PDF பதிவிறக்கம்

காப்பு

தாரமர் கொன்றையும் செண்பக மாலையும் சாத்துந்தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழையும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே ! நிற்கக் கட்டுரையே

நூல்


கல்வி ஞானம் பெற:
உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி,மேன்கொடிக் குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே

தொழில்கள் அபிவிருத்தியடைய
மனித்ருந்தேவரும்மாயா முனிவரும் வந்து சென்னிக்
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்ச்சடைமேல்
பணிதருந்திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயுமேன் புந்திஎன்னாலும் பொருந்தகவே.

துன்பங்கள் அகல
ததியுறு மத்தில் புழளுமேன்னாவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருதுகண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
துதுயுறு சேவடி யைசிந்துரானன ஸுந்தரியே.

ஆயுள் விருத்தியடைய
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணகோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்ட பொற்பாதம் ஆகிவந்த
வெவ்விய காலன் என் மேல்வரும்போது வெளி நிற்கவே.

சகல செல்வங்களும் பெற
உறைகின்ற நின்றிருக் கோயிலின் கேல்வரோருபக்கமோ
அறைகின்ற நான்மறையின் அடியோமுடி யோவமுதமும்
நிறைகின்ற வேந்திங்கலோகஞ்சகமோ எந்தன்நெஞ்சகமோ
மறைகின்ற வாரித யோபூர ணாசல மங்கலையே?

தீராத நோய்கள் தீர
மணியே மணியி னொளியே யொளிரும் மணிபுனைந்த
அணியே யணியு மணிக்கழ கேயனு காதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியே நோருவரை நின்பத்ம பாதம் பணிந்தபின்னே.

காரியங்கள் தடையின்றி நிறைவேற
பின்னே திறந்துன் னடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதன் மூவருக்கும்
அன்னே யுலகுக் கபிராமி என்னுமருமருந்தே
என்னே இனியுன்னை யான்மற வாமனின் றேத்துவனே.

மனோவியாதி குணமடைய
உடைத்தனை வஞ்சப் பிறவியை உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்மபதயுகம் சூடும் பனி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் னின் அருள்
புனலால் துடைத்தனை ஸுந்தரி நின் அருள் ஏது என்று சொல்லுவதே.

ஆபத்துகள் விலகிட
ஆசைக்கடலில் அகப்பட்டு அருள் ஏற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லல்பட இருந்தேனை,நின்பாதம் என்னும்
வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டுகொண்ட
நேசத்தை என் சொல்வேன்? ஈசர்பாகத்து நேரிழையே.

விளைநிலங்கள் செழிக்க
வந்தே சரணம் புகும் அடியாருக்கு வான் உலகம்
தந்தே பரிவோடு தான் போயிருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொன்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே.

பகைமை ஒழிய
பரிபுரச் சீறடிப் பாசாங் குசைபஞ்ச பாணியின்சொல்
திரிபுர சுந்தரி சிந்தூர மேனியன் தீமைநெஞ்சில்
பரிபுர வஞ்சரை யஞ்சக் குனிபெறுப் புச்சிலைக்கை
எரிபுரை மேனியிரைவர்செம் பாகத் திருந்தவளே.

கல்வி, அறிவு பெறுக
வல்லபம் ஒன்றறியேன் சிறியேன் நின் மலரடிச்செம்
பல்லவம் அல்லது பரறோன்ரி லேன்பகம் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப் பாய்வினையேன் தொடுத்த
சொல்அவ மாயினும் நின்திரு நாமங்கள் தோத்திரமே.

தீயசக்திகள் அழிய
தோத்திரம் செய்து தொழுதுமின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில்வையாதவர் வண்மைகுலம்
கோத்திரம் கல்வி, குணங்குன்றி நாளும் குடில்கள் தோறும்
பாத்திரம் கொண்டு பலிக்குழலா நிற்பார் பாரெங்குமே.

நிலம், வீடு வாங்க
பாரும் புனலும் கனலும்வேங்க்காலும் படர்விசும்பும்
ஊரும் முருகு சுவையொளி யூரொலி யோன்றுபடச்
சேறுந் தலைவி சிவகாமசுந்தரி சீரடிக்கே
சாறுந் தவமுடையாற்படையாத தனமில்லையே.

சகல ஐஸ்வர்யங்களும் உண்டாக
தனந்தரும் கல்விதருமொரு நாளுந்தலர்வரியா
மனம் தரும் தெய்வவடிவந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும் நல்லன் வெல்லாம் தரும்அன்ப ரென்பவர்க்கே
கணம் தரும் பூங்குழலாளபிராமி கடைக்கண்களே.

இறைவழிபாட்டால் உயர்வு அடைய
நயனங்கள் மூன்று உடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராமி வள்ளி அடி இணையைப்
பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும் பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.

விதியை வெல்ல
தங்குவர் கற்பகத் தாருவி னீழலில் தாயார் இன்றி
மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும்
பொங்குவ ராழியு மீரேழ் புவனமும் பூத்தவுந்திக்
கொங்கிவர் பூங்குழ லாள்திரு மேனி குறித்தவரே.

பகைவர்களினால் ஏற்படும் பயம் நீங்க
பயிரவி பஞ்சமி பாடசாங்குசைபஞ்ச பாணிவன்ஜர்
உயிரவி யுண்ணு முயர்ச்சண்டி காலி யோருளிருங்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகியென்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே.

மனகுறைகள் நீங்க
அழகுக் கொருவரு மொவ்வாத வள்ளி யருமரைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத் தாள்பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்ற நின்றநெஞ் சேயிரங் கேளுனக் கென்குறையே.

நிலையான செல்வம் பெற
கூட்டியவா என்னைத் தன்னடியாரிர் கொடியவினை
ஒட்டியவா வென்க ஒண்டிய வாதன்னை யுள்ளவண்ணம்
காட்டியவ கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றனவா
ஆட்டிய வாநட மாடகத் தாமரை யாரனங்கே.

தேவியின் அருள் என்றும் நிலைத்திருக்க
பரம் என்று உன்னை அடைந்தேன் தமியேனும் உன்பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத்தகாது தரியலர் தம்
புறம் அன்று எறியப் பொருப்பு வில் வாங்கிய போதில் அயன்
சிரம் ஒன்று செற்றகை யான் இடப்பாகம் சிறந்தவளே.

அரசு காரியங்களில் வெற்றிபெற
மெல்லிய நுண்ணிடை மின்னனை யாளை விரிசடையோன்
புல்லிய மென்முலைப் பொன்னனை யாளை புகழ்ந்துமறை
சொல்லிய வண்ணம் தொழுமடி யாரைத் தொழுமவர்க்குப்
பல்லிய மார்த்தொழு வெண்பக டூரும் பதந்தருமே.

மென்மேலும் தான, தர்மம் வளர
ஆதிதனம் புலி யங்கி குபேர னமரர் தங்கோன்
போதிற் பிரமன், புராரி, முராரி பொதியமுனி
காதிப் பெருபடைக் கந்தன் கணபதி, காமன்முதல்
சாதித்த புண்ணிய ரெண்ணிளர் போற்றுவர் தையலையே.

HTML Comment Box is loading comments...


முதல் பக்கம்

© www.adiyaar.com